பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு தூக்கு தண்டனை! நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃபுக்கு தூக்கு தண்டனை! நீதிமன்றம் உத்தரவு!



court punishment for pervez musharraf


முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராகப் பொறுப்பு வகித்தபோது, 2007 ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழ்க்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்ததன் மூலம் தேசதுரோக குற்றத்தை செய்துவிட்டதாக முஷாரஃப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அந்த வழக்கின் தீா்ப்பு கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தீா்ப்பை நிறுத்திவைக்க இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றமும், லாகூா் உயா்நீதிமன்றமும் உத்தரவிட்டன.

pervez musharraf

இந்த நிலையில், வழக்கின் தீா்ப்பு 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. அந்தவகையில், இந்த வழக்கில் முஷாரஃப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.