உலகம் லைப் ஸ்டைல் Covid-19

ஊரடங்கு உத்தரவை மீறி உல்லாசத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி.! பட்டப்பகலில் உச்சி வெயிலில் நடந்த மோசமான சம்பவம்.!

Summary:

Couple caught having relationship in south London park

உலகமே கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவித்துவருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் கூட கொரோனா பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த Ahmad Zeidan என்ற பெண் மதியம் 2 மணியளவில் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள உட்லண்ட்ஸ் பூங்காவில் நடைபயணம் மேற்கொண்டபோது, அங்கிருந்த திறந்தவெளியில், உச்சி வெயிலில்  காதலர்கள் இருவர் உல்லாசத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தான் சத்தம் போட்டும் அவர்கள் அங்கிருந்து நகரவில்லை என்றும், அருகில் குடும்பங்கள், குழந்தைகள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் திறந்த வெளியில் அவர்கள் உல்லாசத்தில் ஈடுபட்ட செயல் மிகவும் அருவருப்பாக உள்ளதாக, அந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் Ahmad Zeidan.

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அந்நாட்டிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஆனால், மக்கள் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டு பேருக்கு மேல் ஒன்றாக கூட கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவையும் மீறி, மக்கள், குழந்தைகள் கூடும் பூங்காவில் காதல் ஜோடி பட்டப்பகலில் உறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source : www.thesun.co.uk


Advertisement