உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பல ஆயிரம் வருஷமா அந்த 2 உயிர்லதான் கொரோனா வாழ்ந்திருக்கு..! இப்போ மனிதனுக்கு பரவியது எப்படி.? சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை.!

Summary:

Coronovirus transmission from animal to human

கொரோனா வைரஸ் எப்படி மனிதர்களுக்கு பரவியிருக்கும் என்ற ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளனர் சீனா ஆராய்ச்சியாளர்கள்.

அவர்களின் ஆய்வு படி, கொரோனா வைரஸ் அழிந்து வரும் ஓரு உயிரினத்தில் இருந்து பரவி இருக்க கூடும் என கூறுகின்றனர். அதாவது, பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் ஹார்ஸ்ஹூ இன வவ்வால்களில் ஒரு கிருமி தொற்று இருந்ததாகவும், வவ்வால்களில் இருக்கும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அந்த கிருமியுடன் போராடி வவ்வால்களை காப்பாற்றி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஹார்ஸ்ஹூ வவ்வால்கள் பரிணாம வளர்சி அடைய அடைய அந்த கிருமிகளும் அவற்றுடன் சேர்ந்தே வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், அந்த கிருமிதான் கொரோனா வைரசின் மூதாதையரான SARS Cov 2 என கூறுகின்றனர். இந்த வைரஸானது எப்படியோ ஹார்ஸ்ஹூ வௌவால்களில் இருந்து பேன்கோலின் என அழைக்கப்படும் எறும்புத் தின்னியின் உடலுக்குள் கடத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற வைரஸ் ஒரு உயிரில் இருந்து மற்றொரு உயிருக்கு தாவும்போது புதிய உயிரினத்தின் செல்களுக்குள் நுழைவதற்கு ஏற்ப தன்னை உருமாற்றிக்கொள்வதுடன் மேலும் வலுவானதாக மாறுகின்றன. இதன் அடிப்படையிலேயே கொரோனா வைரஸ் எறும்பு தின்னியின் உடலில் வாழ்ந்து வந்துள்ளது.

தற்போது சீனாவின் கள்ளச்சந்தைகளில் எறும்பு தின்னி சட்டவிரோதமாக விற்கப்பட்டுவரும் நிலையில், கொரோனா வைரஸ் இருந்த எறும்பு தின்னியை மனிதன் தனது கைகளால் தொட்டு தூக்கியதன் மூலம் எறும்பு திண்ணியில் இருந்து தனது புது இருப்பிடமான மனிதனுக்குள் கொரோனா வைரஸ் புகுந்துள்ளது.

தனக்கே உரித்தான புது பண்புகள், வலிமையுடன் கொரோனா வைரஸ் மனித செல்களுக்குள் ஊடுருவும் வகையில் தன்னை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. இவ்வாறே உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


Advertisement