உலகம்

வெறும் 8000 சாப்பாடு பொட்டலங்களுக்காக 4 கிலோமீட்டர் வரிசையில் நின்ற பல்லாயிர கணக்கான ஏழை மக்கள்..! ஒருவேளை சோத்துக்காக படும் பாடு.! கண்கலங்க வைக்கும் சம்பவம்.!

Summary:

Corono lock down south africa people standing 4 km for food

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்து ஒருவேளை சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஒருவேளை உணவிற்காக மக்கள் 4 கிலோமீட்டர் வரிசையில் காத்திருந்த காணொளி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதை அடுத்து அந்நாட்டில் இதுவரை 5,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் 116 பேர் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலியாகியுள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தென்னாபிரிக்காவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வேலைகளை இளைந்துள்ள நிலையில் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால் அரசும், சில தனியார் தொண்டுநிறுவங்களும் சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 8000 பொட்டலங்கள் சாப்பாடு தயார் செய்தது.

இந்நிலையில், சாப்பாடு வழங்கப்போவதாக தகவல் பரவியதை அடுத்து அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. 8000 பொட்டலங்கள் மட்டுமே தயார் செய்யப்பட்ட நிலையில், பல்லாயிர கணக்கான மக்கள் சுமார் 4 கிலோமிட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாப்பாடுகளை வாங்கிச்சென்றது பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.


Advertisement