உலகம்

24 மணி நேரத்தில் 1,169 பேர் உயிர் இழப்பு.! ஒரு நாள் இறப்பில் முதல் இடம் பிடித்தது அமெரிக்கா.!

Summary:

Corono death in USA in last 24 hours

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனோவின் கோர பிடியில் சிக்கி அணைத்து நாடுகளும் தவித்துவருகிறது. இதில், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா கொரோனாவால் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,169 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக இத்தாலி நாட்டில் ஒரே நாளில் 969 பேர் உயிரிழந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அமெரிக்கா ஒரே நாளில் அதிக இழப்புகளில் முதல் இடத்தில் உள்ளது.

மேலும், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  2 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 6,057 பேர் இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர்.

இத்தாலி நாட்டில் இதுவரை 13,915 பேர், ஸ்பெயினில் 10,348 பேர் உயிரிழந்துள நிலையில் இந்த இரு நாடுகளும் அதிக உயிர் இழப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது.


Advertisement