உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு.! சீனாவின் மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்க வழக்கறிஞர்கள்; 20 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடாக தர கோரிக்கை! - TamilSpark
TamilSpark Logo
உலகம்

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு.! சீனாவின் மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்க வழக்கறிஞர்கள்; 20 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடாக தர கோரிக்கை!

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 4.40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19,000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இன்னும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல நாடுகள் இவ்வைரஸினால் பீதியில் இருந்து வருகின்றனர். அதேபோல் தான் வல்லரசான அமெரிக்கா நாடும் பீதியில் இருந்து வருகிறது.

இந்நோயால் அமெரிக்காவில் இதுவரை 50 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸை பரப்பியதற்காக சீனாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

அங்குள்ள டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவோடு இணைந்து அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேனும் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் மிகுந்த ஆபத்தானது. உலகின் பொதுச்சட்டத்தை மீறி சீனா இந்த வைரஸை உருவாக்கி பரப்பியுள்ளது. எனவே அமெரிக்காவுக்கு 20 டிரில்லியன் டாலர்களை சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo