சீனா வேண்டுமென்றே உருவாக்கியதுதான் இந்த கொரோனா வைரஸா..? சந்தேகம் எழுப்பும் இஸ்ரேல் விஞ்ஞானி.!

சீனா வேண்டுமென்றே உருவாக்கியதுதான் இந்த கொரோனா வைரஸா..? சந்தேகம் எழுப்பும் இஸ்ரேல் விஞ்ஞானி.!



Corona virus from china bio weapon laboratory

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் விலங்குகள் மூலம் பரவவில்லை என்றும் சீனாதான் அந்த வைரஸை உருவாகியுள்ளதாகவும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே போரின் போது வெடிகுண்டுகள், துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணைகள் பயன்படுத்தப்படுவது தாண்டி வருங்காலத்தில் பயோ வெப்பன் என்ற புதிய தாக்குதல் யுக்தியை நடத்த பல நாடுகளும் சட்டவிரோதமாக இந்த பயோ சோதனையை நடத்திவருகிறது.

Corona virus

உலகளவில் இதுபோன்ற சோதனைக்கு தடை இருந்தாலும் பெரும்பாலான நாடுகள் இதுபோன்ற சோதனையை மறைமுகமாக நடத்திவருகிறது. இதுபோன்ற முயற்சியில் தீவிரமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக சீனா பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்க, சீனாவின் பயோ சோதனை கூடம் இருக்கும் வுஹான் நகரில் இருந்துதான் இந்த கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. பயோ- வெப்பன் இதனை  விஞானிகள் பலரும் ஆமோதித்துள்ளனர்.

ஆனால், வுஹான் நகரில் இருக்கும் இறைச்சி சந்தையிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்றும், பயோ- வெப்பன் ஆய்வு கூடத்தில் இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா தான் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக சீனா கூறியுள்ளது.