அமெரிக்காவில் அடங்காத கொரோனா! நேற்று ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா!

அமெரிக்காவில் அடங்காத கொரோனா! நேற்று ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா!


corona-increased-in-america

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.20 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.5 லட்சத்தைக் கடந்துள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 61,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1.38 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் மாகாணங்களான டெக்ஸாஸ், கலிபோர்னியாவில் கொரோனா தொற்று அதிகமாகக் காணப்படுகிறது.