உலகம் மருத்துவம் Corono+

கொரோனவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Summary:

Corona death increase

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தையும், கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த உலகின் பல நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸால் நாள்தோறும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுவரை உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி  37,815 பேர் கொரோனா வைரஸால்  பலியாகியுள்ளனர். அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை சுமார் 1, 65, 000 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

இதுவரை இத்தாலியில்  11,000 பெரும், அமெரிக்காவில் 3,165 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஈரானில் 2,700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


Advertisement