இந்தியா உலகம்

3 வது அலையின் தொடக்கமா?? மீண்டும் பரவ தொடங்கிய கொரோனா.. பள்ளிகளை மூட அரசு உத்தரவு..

Summary:

3 வது அலையின் தொடக்கமா?? மீண்டும் பரவ தொடங்கிய கொரோனா.. பள்ளிகளை மூட அரசு உத்தரவு..

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா ஓரளவிற்கு கட்டுக்குள் இருந்தாலும் கூட, மீண்டும் எப்போது பரவ தொடங்குமோ என்ற அச்சம் இன்றுவரை மக்கள் மனதில் உள்ளது.

கொரோனா உருவான இடமாக கூறப்படும் சீனாவிலும் கொரோனா பரவல் கட்டுக்குள் இந்தநிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து 5-வது நாளாக தொற்று அதிகரித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா திடீரென ரத்து செய்துள்ளது. தொற்று பரவக்கூடிய இடங்களைக் கண்டறிந்து வட்டார அளவில் முழு முடக்கத்தை கடைபிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வரும் நவம்பர் 1 முதல் 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், சீனாவில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியிருப்பது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement