இந்தியா

கொரோனா அச்சுறுத்தலால்:CISCE -10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Summary:

Corona

ஏற்கனவே சிபிஎஸ்இ மாணவர்களின் 10,12 வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள சர்வேதேச பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயின்று வரும் மாணவர்களின் 10,12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா அச்சத்தின் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முதலில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு மக்கள் ஒன்றாக கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தலால் 10, 12ஆம் வகுப்புக்கான ICSE மற்றும் ISC தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகள் நடக்கவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Advertisement