உலகம்

7 வாரங்கள்..! 3200 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து சொந்த ஊருக்கு சென்ற மாணவர்..! ஊரடங்கை வென்று சாதனை படைத்த சம்பவம்..!

Summary:

College student traveled 3200 km by cycle

இளைஞர் ஒருவர் 7 வாரம் சைக்கிளில் பயணம் செய்து 3200கி.மீ தூரத்தை கடந்து தனது வீட்டை அடைந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் ஸ்காட்லாந்த்து நாட்டிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அந்நாட்டின் அபர்தீன் என்ற பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துவந்த கிளியான் என்ற மாணவர் ஊரடங்கு காரணமாக கல்லூரியில் மாட்டிக்கொண்டார்.

இவரது வீடு அவர் படிக்கும் கல்லூரியில் இருந்து சுமார் 3200கி.மீ தூரம். போக்குவரத்து வசதியும் நிறுத்தப்பட்டதால் எப்படியும் தனது வீட்டிற்கு செல்லவேண்டும் என முடிவு செய்த கிளியான் 3200கி.மீ தூரத்தை சைக்கிளில் பயணம் செய்து கடப்பதென முடிவு செய்தார். இதனை அடுத்து ப்ரெட் பாக்கெட், வெண்ணெய் என சாப்பாட்டிற்கு தேவையான சில பொருட்களை எடுத்துகொண்டு சைக்கிளில் பயணம் செய்துள்ளார்.

இடையில் தங்குவதற்கு கூடாரம் அமைப்பதற்கான பொருட்களையும் தன்னுடன் எடுத்துச்சென்ற கிளியான் ஆங்காங்கே கூடாரம் அமைத்து சுமார் 7 வாரம் சைக்கிளில் பயணம் செய்து 3200கி.மீ தூரதத்தை கடந்து தனது வீட்டை அடைந்துள்ளார்.

சாகச பயணம் மேற்கொள்வதில் இவருக்கு அதிக ஆர்வம் உண்டு என்பதால் இந்த ஆபத்தான பயணத்தை துணிச்சலாக மேற்கொண்டதாக கூறியுள்ளார் கிளியான்.


Advertisement