உலகம்

ஒரே நேரத்தில் 10 பீர் குடித்துவிட்டு விடிய விடிய தூங்கிய நபர்..! மறுநாள் காலையில் எழுந்தபோது காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

China men drunk 10 beer and got bladder infection

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஒரே நேரத்தில் 10 பீர்கள் குடித்து விட்டு 18 மணி நேரமாக சிறுநீர் கழிக்காமல் தூங்கிய நிலையில் அவருக்கு சிறுநீர்ப்பை சிதைவு ஏற்பட்டு அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த ஹூ என்ற 40 வயதான நபர் ஒருவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு உறங்குவதற்கு முன் ஹூ தொடர்ச்சியாக 10 பீர்களை குடித்துவிட்டு தொடர்ந்து 18 மணி நேரம் தூங்கியுள்ளார். இடையில் ஒருமுறை கூட சிறுநீர் கழிக்கவில்லை.

இதனை அடுத்து அடுத்தநாள் கண்விழித்த ஹூ, தனது அடிவயிற்று பகுதியில் பயங்கர வலி இருப்பதை உணர்ந்து வலியால் கதறி துடித்துள்ளார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது சிறுநீர்ப்பை சேதமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதன்பின்னர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர்ப்பை சிதைவை மருத்துவர்கள் சரி செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு ஹூ இயல்புநிலைக்கு திரும்பி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்திருந்ததே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Advertisement