உலகம்

உடம்பு சரியில்லாத தனது குட்டியை மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு வாயில் கவ்வி தூக்கிச்சென்ற தாய் பூனை..! நெகிழ்ச்சி சம்பவம்.!

Summary:

Cat carries her sick kitten to a hospital in Turkey

உடம்பு சரியில்லாத தனது குட்டியை கவ்விக்கொண்டு தாய் பூனை ஓன்று நேராக மருத்துவமனைக்கு சென்றதும், மேலும் மருத்துவமனையில் இருந்த அவசர சிகிச்சை பிரிவிற்கு குட்டியை தூக்கி கொண்டு சென்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு தாய் பூனை ஓன்று தனது வாயில் குட்டியை கவ்வியபடி நேராக அவசர பிரிவுக்கு சென்றுள்ளது. அங்கிருந்தவர்கள் பூனையின் குட்டிக்கு உடம்பு சரியில்லை என்பதை புரிந்துகொண்டு தாய் பூனையிடம் இருந்து குட்டியை வாங்க முயன்றுள்ளன்னர்.

ஆனால், தாய் பூனை குட்டியை யாரிடமும் தருவதாக இல்லை. இதனை அடுத்து அங்கிருந்த மருத்துவர்கள் பூனையை அரவணைத்து அதற்கு சாப்பாடு, பால் போன்றவற்றை வழங்கி பின்னர் அந்த பூனையை கால்நடை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளன்னர்.

உடம்பு சரியில்லாத தங்கள் சொந்தகளையே சிலர் தூக்கி எரியும் இந்த சூழலில் வாயில்லாத ஜீவன் தனது குட்டியை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற சம்பவம் உலகளவில் வைரலாகிவருகிறது. இதுதான் தாய் அன்பு என அனைவரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement