வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
5 வருடங்களில் இமாலய புகழ், மக்கள் சேவை.. உலகளவில் பெருமைபெற்ற மகவா எலி மரணம்.!
கண்ணிவெடிகளை கண்டறிந்து கொடுத்து அதிகாரிகளுக்கு பெரும் உதவி செய்த மகவா எலி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க நாடுகளை சார்ந்த ராட்சத பை ரக மகவா எலி, கம்போடியா நாட்டில் கடந்த 5 வருடமாக இராணுவம் மற்றும் வெடிபொருள் கண்டெடுப்பு துறையினரால் உபயோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த எலிக்கு மகவா என்று பெயரிட்டு அழைத்து வந்த நிலையில், கடந்த 5 வருடத்தில் கம்போடியாவில் புதைக்கப்பட்டு இருந்த 100 க்கும் மேற்பட்ட கன்னி வெடிகள் மற்றும் வெடிக்காத குண்டுகளை மோப்பம் பிடித்து அதிகாரிகளுக்கு கண்டறிந்து கொடுத்தது. அதனைப்போல, அனுமதியில்லாத சுரங்கத்தையும் கண்டறிந்தது.
மகவாவின் செயலை பாராட்டி அதற்கு பல சர்வதேச விருதுகளும் கிடைத்த நிலையில், பலரின் மனதையும் கவர்ந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மகவா ஓய்வு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது, வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி இருந்த மகவா எலி உயிரிழந்தது. அதற்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவம் செய்திருந்த நிலையில், தனது வாழ்நாள் ஆயுளை நிவர்த்தி செய்து இருக்கிறது. மகவா வகை எலிகள் 7 வருடங்கள் அல்லது 8 வருடங்கள் வரை மட்டுமே உயிர்வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.