உலகம் Covid-19

கடையில் இருந்த பொருட்களை நாவினால் நக்கி கொரோனாவை பரப்பிய பெண்.! வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ஊழியர்கள்.

Summary:

California woman arrested for licking groceries in super market

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நுழைந்த 53 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடையில் வைகைப்பட்டிருந்த பொருட்களை எடுத்து தனது நாவினால் நக்கிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் உலக வல்லரசு நாடுகளில் மிகவும் முக்கிய நாடான அமெரிக்காவை ஆட்டிப்படைத்துவருகிறது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் 455,454 பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 16,114 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும், நாளுக்கு நாள் அந்நாட்டில் கொரோனா பயம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பத்தியில் அமைத்துள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குள் ஜெனிபர் வாக்கர் என்ற 53 வயது பெண் ஒருவர் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பொருட்கள் வாங்க சென்றவர் சுமார் 18000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை எடுத்து அவை அனைத்தையும் தனது நாவினால் நக்கி மீண்டும் அதே இடத்தில் வைத்துள்ளார்.

மேலும், விலையுயர்ந்த நகைகளையும் அவர் நக்குவதை விடீயோவில் பார்த்த கடையில் இருந்த நபர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஏற்கனவே கொரோனா பயம் அமெரிக்காவை உலுக்கி வரும் நிலையில், கொரோனாவை பரப்புவதுபோல் இந்த பெண் நடந்துகொண்டதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியும், பயமும் அடைந்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement