உலகம்

மர்மநபர்கள் தாக்கிய பயங்கர தாக்குதல்... 50 பேரை கொன்ற பரிதாபம்... மக்களை பிணைக்கைதிகளாக்கிய கொடூரம்..!

Summary:

மர்மநபர்கள் தாக்கிய பயங்கர தாக்குதல்... 50 பேரை கொன்ற பரிதாபம்... மக்களை பிணைக்கைதிகளாக்கிய கொடூரம்..!

மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் 50 பேர் கொல்லப்பட்ட பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினா பசோ நாட்டில் பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். 

இந்த நிலையில் மீண்டும் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, மக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

அத்துடன் நாட்டின் கிழக்கு மற்றும் மத்ஜோவாரி பகுதியில் ஆயுதம் ஏந்திய மர்மநபர்கள் சிலர் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த கோரத் தாக்குதலில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பலரும் காயமடைந்த நிலையில், இதனை கிழக்கு பகுதி கவர்னர் ஹுபர்ட செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். 

தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் ராணுவ துணை நிலை வீரர்கள் 10 பேர் மற்றும் குடிமக்களில் 2 பேர் உள்ளிட்ட 12 பேரை அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற ராணுவ வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும், இந்த தாக்குதலை நடத்தி வரும் மர்ம நபர்கள் யாரென்று விரைவில் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement