ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
வீட்டு அறையில் தானாக ஓடிக்கொண்டிருந்த ஏசி.. உள்ளே சென்று பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. செம ட்விஸ்ட்..!
திருட சென்ற இடத்தில் திருடன் ஒருவர் ஏசியை போட்டுவிட்டு தூங்கிய சம்பவம் வைரலாகிவருகிறது.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த அதித் கின் குந்துத் என்ற 22 வயது இளைஞர் ஒருவர் திருட்டு தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் திருடன் அதித் தாய்லாந்தில் உள்ள வீடு ஒன்றில் இரவு 2 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து திருட சென்றுள்ளான். வீட்டில் இருந்த தேவையான பொருட்களை திருடிவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல நினைத்த அதித், வீட்டின் ஒரு அறையில் இருந்த ஏசி ரிமோட்டை பார்த்ததும், சற்று தூங்கி ஓய்வெடுத்துவிட்டு பிறகு செல்லலாம் என தீர்மானித்துள்ளான்.
இதனை அடுத்து அறையில் இருந்த ஏசியை போட்டுவிட்டு கட்டிலில் படுத்து, போர்வையை போர்த்திக்கொண்டு நன்கு தூங்க ஆரம்பித்துள்ளான் அதித். ஆனால் இருந்த அசதியில் தான் திருட வந்த இடம் என்பதையே மறந்துவிட்டு காலை வரை தூங்கியுள்ளான் திருடன். இந்நிலையில் காலை எழுந்த வீட்டின் உரிமையாளர், யாரும் இல்லாத அறையில் ஏசி ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எப்படி ஏசி தானாக ஆன் ஆனது என நினைத்துகொன்டே கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது, அங்கு யாரோ ஒருவர் படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு போன் செய்து விவரத்தை கூற, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடன் படுத்திருந்த ரூம் முழுவதும் சுத்தி நின்று, திருடன் எழுப்பியுள்ளனர்.
ஒன்னும் தெரியாததுபோல் எழுந்த திருடன் அதன் பின்னர்தான் தான் திருட வந்த இடத்திலையே படுத்து தூங்கிவிட்டதை தெரிந்துகொண்டான். இதில் மேலும் கொடுமையான விஷயம் என்னவென்றால் அவன் திருட வந்ததே ஒரு காவல் துறை அதிகாரியின் வீட்டிற்குள்தானாம்.
தற்போது அவனை கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகிவருகிறது.