உலகம்

துறவியின் குழந்தை இளம் பெண்ணின் வயிற்றில்..! உன் குழந்தை தான் என் வயித்துல வளருது..! முன்னாள் காதலியை துடிக்க துடிக்க துறவி செய்த கொடூரம்..!

Summary:

Buddhist saint killed pregnant woman near Thailand

புத்தமத துறவி ஒருவர் இளம் பெண்ணை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்தவர் புத்தமத துறவியான தீரென்ராம் (57). இவர் துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய(36) என்ற பெண்ணை காதலித்ததாகவும், அதன்பின்னர் காதலியை பிரிந்து துறவியானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தீரென்ராம் தனது முன்னாள் காதலியின் வீட்டு பக்கம் காரில் சென்றுள்ளார்.

அப்போது லம்பாய் புவலோயவும் அவரது புது காதலரும் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த துறவி, தான் வந்த கார் மூலம் நேராக அவர்கள் அமர்ந்திருந்த காரில் மோதியுள்ளார். இதனை அடுத்து புது காதலர் பயத்தில் அங்கிருந்து ஓடியுள்ளார்.

காரில் இருந்து லம்பாய் கீழே இறங்கிய நிலையில், தான் வைத்திருந்த கத்தி மூலம் அவரை சராமாரியாக குத்தி கொலை செய்துள்ளார் தீரென்ராம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் துறவியை அங்கு வைத்தே கைது செய்தனர்.

மேலும், கொலை செய்யப்பட்ட லம்பாய் 8 மாதம் கர்ப்பமாக இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். கொலை குறித்து துறவியின் சகோதரர் ஒருவர் கூறுகையில், லம்பாய் அடிக்கடி பணம் கேட்டு தீரென்ராமை தொல்லை செய்ததாகவும், காதலிக்கும்போது அவரால் கர்ப்பமான நிலையில், பணம் தராவிட்டால் உனது குழந்தை என் வயிற்றில் வளர்வது பற்றி எல்லோரிடமும் கூறிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் உனது துறவி வாழ்க்கை நாசமாகிவிடும் எனவும் மிரட்டியதாக தீரென்ராமின் சகோதரர் கூறியுள்ளார். என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் அமைதிக்கு பெயர்போன புத்த மதத்தை சேர்ந்த துறவி ஒருவர் கர்ப்பிணி பெண்ணை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement