உலகம்

அண்ணி மீது ஏற்பட்ட காதல்! உடன்பிறந்த சகோதரனுக்கு ஏற்பட்ட கொடூரம்!

Summary:

brother killed for his brothers wife

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் அலீம். இவரின் மூத்த சகோதரர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சகோதரரின் மனைவியுடன் அலீமுக்கு தொடர்பு ஏற்பட்டது, இதனையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.

இந்நிலையில் சவுதியில் உள்ள அலீமின் சகோதரர் சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அலீம் தனது திருமணத்துக்கு அண்ணன் தடையாக இருப்பார் என நினைத்துள்ளார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

gun shoot க்கான பட முடிவு

இந்தநிலையில் அளீம் தனது சகோதரரை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் திடீரென அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அண்ணணை சுட்டு கொலை செய்துள்ளார் அலீம். பின்னர் வீட்டிற்கு சென்ற அலீம் கொள்ளையடிக்கும் முயற்சியில் கொள்ளையர்கள் தனது அண்ணனை சுட்டு கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினரிடம் நாடகம் ஆடியுள்ளார்.

இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  அலீமிடம் விசாரித்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அண்ணனை கொலை செய்ததை அலீம் ஒப்பு கொண்டார், இதையடுத்து அலீமை கைது செய்துள்ளனர்.
 


Advertisement