ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட கார்..! கார் கதவை திறந்தப்போ...! 30 வருசத்துக்கு முன்னாடி காணாமல் போனவரின் சடலம்.!Body of man missing for almost 30 years found inside car in river

நதி ஒன்றில் மூழ்கிய காரை மீட்டபோது 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஒருவரின் உடல் இருந்தது தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைந்த சம்பவம் வடக்கு அயர்லாந்தில் நடந்துள்ளது.

வடக்கு அயர்லாந்தில் அமைந்துள்ளது பன் நதி. இந்த  நதியில் இருந்து கடந்த மாதம் ஃபோர்டு ஓரியன் வகை கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மீட்பு குழுவினர் நதியில் இறங்கி காரை வெளியே கொண்டுவந்து அதன் கதவை திறந்தபோது காருக்குள் சடலம் ஒன்று இருந்துள்ளது.

காரில் இறந்துகிடந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர். தீவிர விசாரணைக்கு பிறகு போலீசார் கண்டறிந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சிதரும் விதமாக இருந்துள்ளது. ஆம், கடந்த 1991 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காணாமல் போன ஜேம்ஸ் பேட்டர்சன் என்பவரின் உடல் தான் அது என தெரியவந்துள்ளது.

ஜேம்ஸ் பேட்டர்சன் கடந்த 1991 ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருக்கும் தனது நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால்  அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இப்படியே 30 ஆண்டுகள் கழுந்துவிட்டநிலையில் தற்போது அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

30 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக இருந்தது ஏன்? அவரது மரணத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா என போலீசார் விசாரித்துவருகின்றனர்.