உலகம்

உயிரிழந்த தாயின் வீட்டுக்கு சென்று பொருட்களை எடுத்த மகன்.! அங்கிருந்த ப்ரீஸரை திறந்த போது காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

Body found stuffed in taped-up freezer in Harlem apartment

அமெரிக்காவில் உயிரிழந்த தனது தாயின் அடுக்குமாடி வீட்டுக்கு சென்று வீட்டில் இருக்கும் அவரது உடைமைகளை மகன் எடுத்துக்கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த  freezerல் அழுகிய நிலையில் சடலம் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்கின் Manhattan என்னும் பகுதியில் வசித்துவந்த வயதான பெண் ஒருவர் சமீபத்தில் உயிர் இந்தநிலையில் அவர் வசித்துவந்த வீட்டை காலி செய்ய அவரது மகன் அங்கு சென்றுள்ளார். அங்கு இருந்த தனது தாயின் உடைமைகளை மகன் எடுத்துக்கொண்டிருந்தபோது ப்ரீசரில் என்ன இருக்குறது என பார்க்க முற்பட்டுள்ளார்.

ப்ரீஸரை திறந்தபோது உள்ளே அழுகிய நிலையில் சடலம் ஓன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டு கத்தியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ப்ரீசரில் இருந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், அந்த சடலமானது சுமார் 10 வருடங்களாக அங்கு இருந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ப்ரீசரில் இருந்த சடலம் ஆணா? பெண்ணா என்பதும் தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement