இதனை செய்தால் அவ்ளோதான்... ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் பகிரங்க எச்சரிக்கை.!!

இதனை செய்தால் அவ்ளோதான்... ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் பைடன் பகிரங்க எச்சரிக்கை.!!



biden-warning-to-russia

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நடந்துவருகிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இந்தநிலையில், உக்ரைன் எல்லையில் ரஷ்யா அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் ரஷ்யா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்தநிலையில், உக்ரைன் பகுதியை பிடிக்க ரஷ்யா முயற்சி எடுத்தால், இதற்க்கு முன் இல்லாத அளவுக்கு பெரும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

மேலும், உக்ரைனின் பாதுகாப்பிற்காக அதிநவீன ராணுவ உபகரணங்கள் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் போர் தொடுக்க முயன்றால், ரஷ்யாவுக்கு தான் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.