இவங்கதான் நாட்டோட உண்மையான வைரஸ்! ரொம்ப அவமானமாக இருக்கு! ஆவேசமான பிரபல கிரிக்கெட் வீரர்!

இவங்கதான் நாட்டோட உண்மையான வைரஸ்! ரொம்ப அவமானமாக இருக்கு! ஆவேசமான பிரபல கிரிக்கெட் வீரர்!


Bangladesh cricket player talk about coronovirus affection

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவில் பரவிய இந்த கொடிய கொரோனா வைரஸால் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகெங்கும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

cricket player

இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகமே பெரும் பீதியில் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் நிலையில், தேவையான அத்தியாவசியமான பொருட்கள்,  முகக்கவசம் மற்றும் சானிடைசர் போன்றவற்றின் விலைகள் பல மடங்கு அதிகரித்து விற்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அரசு எச்சரித்தும் பலரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  இதனைக் கண்டு பொங்கி எழுந்த வங்கதேச கிரிக்கெட் வீரரான ரூபல் ஹுசைன் கூறுகையில், நாம் மோசமான பேராசை மிக்க நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீனாவில் மோசமான பாதிப்பின் காரணமாக முககவசத்தின் விலை அங்கு குறைத்து விற்கப்பட்டது. வங்கதேசத்தில் 5 டாகா முககவசம் 50 டாகாவிற்கும், 20 டாகா மதிப்பு கொண்ட முகக்கவசம் 100 முதல் 150டாகா வரை விற்கப்படுகிறது. இவ்வாறு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் அந்த பேராசை பிடித்த வியாபாரிகளை நினைத்து அவமானமாக உள்ளது.அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான வைரஸ் என கூறியுள்ளார்.