உலகம் Covid-19

அப்பா...! என்ன தூக்குங்கப்பா..! கட்டி அணைக்க ஓடிவந்த மகளை தூக்க முடியாமல் தவிக்கும் தந்தை..! கண்கலங்க செய்யும் வீடியோ...!

Summary:

Baby tries to hug his doctor father who treat corono

மருத்துவர் ஒருவர் தனது குழந்தையை தூக்க முடியாமல் கண்ணாடிக்கு வெளியே நின்று தனது குழந்தையை கொஞ்சிமகிழும் வீடியோ காட்சி பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றோர் தங்கள் உயிரையும் பணயம் வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கி அவர்களை காப்பாற்றிவருகின்றனர்.

பெரும்பாலும் அணைத்து நாடுகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள், ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் மூலம் அவர்கள் குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளதால் அவர்கள் மருத்துவமனைகளிலையே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் ஒருசிலர் தங்கள் குழந்தைகளை பார்க்கும் நிலை ஏற்பட்டாலும் அவர்களை தூக்கி கொஞ்ச முடியாமல், அவர்கள் அருகில் செல்லமுடியாமல் தவித்துவருகின்றனர். அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது.

கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர் ஒருவர் தனது குழந்தையை கண்ணாடி பின்புறம் நின்று பார்க்கிறார். தனது தந்தையை பார்த்ததும் அந்தத் குழந்தை கைகளை விரித்து தன்னை தூக்கும்படி கூறுகிறது. மேலும், கதவை திறந்துகொண்டு தனது தந்தையின் அருகில் செல்ல முயற்சிக்கிறது.

மகளின் முயற்சியை ரசிக்கும் மருத்துவர் தன் மகளுக்கு ஹாய் சொல்லி ப்ளைன் கிஸ் கொடுக்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி அனைவரையும் கண்கலங்க வைக்கிறது.


Advertisement