ஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம்! தீயாய் பரவும் பகீர் வீடியோ!

ஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம்! தீயாய் பரவும் பகீர் வீடியோ!


awe-inspiring-moment-landslide-sweeps-eight-homes-into

நார்வே நாட்டின் வட பகுதியில் அல்டா என்ற பகுதியில் கடலை ஒட்டியபடி ஒரு சிறுகிராமம் அமைந்துள்ளது. அங்கு எட்டு வீடுகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் அந்த 8 வீடுகளும் நகர்ந்தவாறே சென்று கடலில் மூழ்கியுள்ளது.

இந்த நிகழ்வு  கடுமையான அலைகள் பெருக்கெடுத்து சுனாமியால் ஏற்படவில்லை. மேலும் புயல், நிலநடுக்கம் போன்றவற்றாலும் ஏற்படவில்லை. ஆரவாரமில்லாத நிலச்சரிவு ஏற்பட்டே இது நிகழ்ந்துள்ளது. 

Norway

அந்த கிராமபகுதி கடலை ஒட்டி இருப்பதால் , தண்ணீரால் அரிக்கப்பட்டு ஈரதன்மையால்  பெயர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வித்தியாசமான  சத்தம் கேட்டு வெளியே ஓடிசென்ற  நபர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி, பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.