உலகம்

என்னடா இப்படி ஒரு சோதனை! ஏடிஎம் மையத்தில் வெற்றிகரமாக திருடிய இளைஞர்! அதன் பின் நடந்த ட்விஸ்ட்!

Summary:

Atm

சீனாவில் ஒரு இளைஞன் ஏடிஎம் மையத்தில் நுழைந்து திருடியுள்ளான். ஆனால் அதன் பிறகு ஏடிஎம் மையத்தின் கதவை அவனால் திறக்க முடியாது முழித்து கொண்டு இருக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஷாண்டாங் நகரிலுள்ள ஏடிஎம் மையத்துக்கு வந்த திருடன் யாரும் இல்லாத நேரமாக பார்த்து ஏடிஎம் மையத்தில் நுழைந்து வெற்றிக்கரமாக திருடியுள்ளான். மேலும் அவன் ஏடிஎம் மையத்தின் உள்ளே நுழைந்ததும் அதன் கதவு முடிக்கொண்டது.

அந்த திருடன் வந்த வேலையை முடிந்து விட்டு வெளியே செல்ல முயற்சித்த போது அவனால் அந்த கதவை திறக்க தெரியவில்லை. அங்கே அவன் முழித்து கொண்டிருந்ததை கண்காணிப்பு கேமராவின் மூலமாக பார்த்து விட்டு வங்கி மேலாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்து அந்த திருடனை கைது செய்துள்ளனர்.


Advertisement