இந்தியா உலகம்

கொரோனா அச்சுறுத்தல்! விமானத்தில் இருமினால் இதுதான் நிலைமை! வேதனையுடன் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் வெளியிட்ட பதிவு!

Summary:

Aswin ravichandran tweet about coronovirus

சீனாவில் வுஹான் நகரில் உயிரை குடிக்கக்கூடிய கொடூர கொரனோ வைரஸ் தோன்றி தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது.இந்த கொரனோ வைரஸால் தாக்கப்பட்டு இதுவரை 350 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தோன்றிய வுஹான் நகரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியே யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும், மேலும் வுஹான் நகருக்கு யாரும் வரக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் இருக்கும் பல நாட்டினரும் தீவிர சோதனைகளுக்கு பிறகு தங்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.


மேலும் இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, உலக நாட்டின் பல பகுதியிலும் மக்கள் முன்னெச்சரிக்கையாக முகமூடி அணிந்து உலவுகின்றனர். இதற்கிடையில் யாருக்கேனும் சாதாரணமாக இருமல்,  தும்மல் ஏற்பட்டால் கூட கொரோனா வைரஸ் தாக்குதலாக இருக்கக்கூடுமோ என அருகிலிருப்பவர்கள் அச்சப்பட வேண்டிய சூழ்நிலையும் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் முகமூடி அணிந்து,  கொரோனா வைரஸ் குறித்து மிகவும் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நேரம் மிகவும் மாறிவிட்டது. விமானத்தில் யாரேனும் இருமினாலோ அல்லது தும்மினாலோ சமூக விரோதிகள் போல பார்க்கப்படுகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.


Advertisement