100 அடி செங்குத்தான பள்ளத்தாக்கு..! திடீரென கால் வழுக்கியது..! ஒரு புகைப்படத்திற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட பெண்..!

100 அடி செங்குத்தான பள்ளத்தாக்கு..! திடீரென கால் வழுக்கியது..! ஒரு புகைப்படத்திற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட பெண்..!



Arizona woman 59 falls 100 feet to her death while taking photos at Grand Canyon

ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு பெண் ஒருவர் 100 அடி செங்குத்தான பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ளது உலகின் மிகவும் பிரபலமான கிராண்ட் கேன்யன் என்னும் செங்குத்துப்பள்ளத்தாக்கு. சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த பகுதிக்கு ஏராளமான மக்கள் வருவதும், அங்குள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதும் வழக்கம்.

அந்த வகையில் கடந்த வாரம் அரிசோனா பகுதியை சேர்ந்த மரியா என்ற 59 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் பொழுதை கழிக்க கிராண்ட் கேன்யன் பள்ளத்தார்க்கிற்கு சென்றுள்ளார். மதர் சந்திப்பு என அழைக்கப்படும் ஒரு இடத்தில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மரியா, தான் மட்டும் தனியாக நின்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து செங்குத்தான அந்த இடத்தில் நின்று மரியா புகைப்படம் எடுத்தபோது கால்தவறி 100 அடி செங்குத்தான, கரடுமுரடான பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து மீட்பு படையினர் தீவிர தேடுதலுக்கு பிறகு மரியாவின் உடலை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரித்துவருகின்றனர்.மேலும் , ஒரு புகைப்படத்திற்கு ஆசைப்பட்டு பெண் ஒருவர் கொடூரமான முறையில் மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.