உலகம்

யாருகிட்ட.. முடிஞ்சா வந்து பாரு! வேட்டையாட வந்த சிறுத்தை மானிடம் தோற்றுப்போன வீடியோ ! இப்படி ஒரு ட்விஸ்டா....

Summary:

யாருகிட்ட.. முடிஞ்சா வந்து பாரு! வேட்டையாட வந்த சிறுத்தை மானிடம் தோற்றுப்போன வீடியோ ! இப்படி ஒரு ட்விஸ்டா....

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தங்கள் உணவுக்காக ஒன்றை ஒன்று சார்ந்துதான் உள்ளன. மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் தங்கள் உணவுக்காக மற்ற விலங்குகளை வேட்டையாடி உன்னு வருகிறது. அதிலும் காட்டு விலங்குகள் மற்ற விலங்குகளை உணவுக்காக வேட்டையாடுகிறது.

அந்த  வகையில்  இந்த குறிப்பிட்ட வீடியோவில், மானை வேட்டையாட்ட வந்த சிறுத்தை ஏமாற்றத்தில் தவித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. மான்  ஒன்று புல் மேய்ந்து கொண்டிருக்கும் போது அந்த  மானை  கண்ட  சிறுத்தை ஒன்று அதனை  வேட்டையாட வருகிறது. சிறுத்தை வருவதை பார்த்து அந்த  மான் துளிகூட அஞ்சாமல்  ஜாலியாக புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. அப்போது, அருகில் வரும் சிறுத்தை மானை வேட்டையாட முற்படுகிறது. இருந்தபோதும் அதனால் வேட்டையாட முடியவில்லை. ஏனென்றால், மானுக்கு முன்பு மிகப்பெரிய கம்பிவேலி இருந்ததை சிறுத்தை கவனிக்காமல் வேட்டையாட முயற்சித்தது . வேலி இருக்கும் தைரியத்தில் மான் எந்தவித சலனமும் இன்றி புல் மேய்ந்து  கொண்டிருந்தது. மானை வேட்டையாட முடியாத ஏமாற்றத்தில் சிறுத்தை திரும்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும்  இந்த வீடியோவை  பார்த்து ரசித்து வருகின்றனர்.


Advertisement