ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி..!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணம்.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி..!



andrew-symonds-death-in-a-car-accident

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் மரணமடைந்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சைமண்ட்ஸ் இரவு 10.30 மணியளவில் ஒரு கார் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக குயின்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

காரில் அவர் மட்டும் தனியாக  சென்றதாகவும், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து உருண்டு விழுந்ததாகவும்  முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

46 வயதாகும் சைமண்ட்ஸ் 1975 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 9 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் மற்றும் 198 ஒருநாள்  போட்டிகளில் விளையாடியுள்ளார். 1999 - 2007ம் ஆண்டுகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் உலகை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியபோது அந்த அணியின் முக்கிய தூணாக சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்தார்.

முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் சில மாதங்கள் முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.