உலகம்

ஓயாமல் அழுத ஒரு மாத குழந்தை: பெற்ற தாய் செய்த கொடுமையான செயல்!

Summary:

American mom killed her own son

கள்ளகாதலுக்காக பெற்ற குழந்தைகளை கொலைசெய்தார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி. இதுபோன்ற தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் அல்ல உலகளவில் ஏதாவது ஒரு காரணத்திற்காக பெற்ற தாயே குழந்தைகளை கொள்ளும் அவலம் நடைபெற்றுத்தான் வருகிறது.

தற்போது இதுபோன்று ஒரு சம்பவம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடந்துள்ளது. ஜென்னா போல்வெல் என்னும் இளம்பெண் இவருக்கு 
சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
 
சம்பவம் நடந்த அன்றைக்கு ஜென்னா வீட்டில் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது குழந்தை இடைவிடாமல் தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜென்னா பெற்ற பிள்ளை என்றும் பாராமல் குழந்தையை குளியல் தொட்டியில் அமுக்கி கொலை செய்து குழந்தையின் உடலை அருகிலிருக்கும் பார்க்கில் தூக்கி வீசியுள்ளார்.

பின்னர் குழந்தையை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், குழந்தையை தீவிரமாக தேடிய போலீசாருக்கு ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்தது. ஜென்னாவிடம் கிடுக்குபிடி விசாரணையை தொடங்கிய போலீசார் ஒருகட்டத்தில் தான்தான் குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
 
இதனையடுத்து போலீஸார் குழந்தையின் உடலை கைப்பற்றி அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை கொலை செய்த கொடூர பெண்மணி ஜென்னாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement