அழிவுகளின் நகரமாக துருக்கி?.. கோரத்தாண்டவத்தை உண்டாக்கிய பழைய நிலநடுக்கங்கள் வரலாறு..!

அழிவுகளின் நகரமாக துருக்கி?.. கோரத்தாண்டவத்தை உண்டாக்கிய பழைய நிலநடுக்கங்கள் வரலாறு..!


america-predict-turkey-earthquake-may-death-toll-10-tho

உலக நாடுகள் வெவ்வேறு பூகம்ப மண்டலங்களில் அமைந்திருக்கின்றன. அவ்வப்போது நிலநடுத்தட்டுகளில் ஏற்படும் விளைவுகள் பூகம்பமாக உணரப்பட்டு பேரழிவு நிகழும். துருக்கியும் அதனைப்போன்ற பயங்கர பூகம்பம் ஏற்படும் மண்டலத்திலேயே அமைந்துள்ளது. துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புலை பயங்கர நிலநடுக்கம் அழிக்கலாம் என முன்னதாகவே ஆய்வாளர்கள் கணித்து இருந்தனர்.

அதனை தவிர்கப்பதற்கு அல்லது அதனால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வானுயர்ந்த கட்டிடங்கள் வேண்டாம், நிலத்தின் அடியில் மேற்கொள்ளப்படும் கனிம சுரங்கங்கள் போன்றவற்றில் இருந்து பல விஷயங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தது இருந்தனர். ஆனால், அவற்றை அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை. 

முக்கிய நகரங்களில் வானுயர்ந்த கட்டிடங்கள் எழுந்து அபாயத்தை அதிகரிக்க, இன்று அதிகாலை முதல் இரவு வரையில் ஏற்பட்ட அடுத்தடுத்த 3 நிலநடுக்கத்தால் 1500 பேர் வரை உயிரிழந்துவிட்டனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. பல நாடுகளில் இருந்து மீட்பு படை அங்கு விரைந்து சென்றுள்ளது. 

turkey earthquake

துருக்கியின் வரலாற்றை பொறுத்தமட்டில் கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 17ல் ஏற்பட்ட 7.4 புள்ளி நிலநடுக்கம் 17 ஆயிரம் பேரின் உயிரை காவு வாங்கியது. கடந்த 2003ல்  ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 170 பேரையும், 2011ல் ஏற்பட்ட அடுத்தடுத்த 3 நிலநடுக்கம் (ரிக்டர் அளவில் 7.2, 5.8, 5.6) 600 பேரையும் பழிவாங்கியது.

அதனைத்தொடர்ந்து 2020ல் ஏற்பட்ட நிலநடுக்கம் 40 பேரை காவு வாங்கியது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. தற்போது 2023ல் பிப்ரவரி 6ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள 3 நிலநடுக்கங்கள் தற்போதைய நிலவரப்படி மட்டுமே 1500 பேரை காவு வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலஅடுக்கத்தால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா கணித்துள்ளது.