உணவு திருவிழாவில் பயங்கரம்.. கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கி சூடு.. 5 பேர் படுகாயம்.!

உணவு திருவிழாவில் பயங்கரம்.. கண்மூடித்தனமாக நடந்த துப்பாக்கி சூடு.. 5 பேர் படுகாயம்.!


america-man-coming-food-party-and-shooted-5-peoples

உணவு திருவிழாவில் புகுந்த மர்ம நபர், சுற்றியிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள மிஸ்ஸிஸிப்பி மாகாணம், ஜாக்சன் நகரில் ஒவ்வொரு வருடமும் மட்பக் என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அப்போது உணவு திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், சமையல் போட்டிகள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படும்.

இந்த நிலையில், இந்த வருடத்திற்கான உணவு திருவிழாவின்போது உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, அங்குள்ளவர்களை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியுள்ளார். இதில் சிலர் தப்பி ஓடிய நிலையில், துப்பாக்கி சூட்டில் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

America

தொடர்ந்து காயமடைந்தவர்களை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தாகவும், 5 பேர் பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.