சீனாவை சீண்டி பார்க்கும் அமெரிக்கா... தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால்... தைவானை அமெரிக்க பாதுகாக்கும்..!!

சீனாவை சீண்டி பார்க்கும் அமெரிக்கா... தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால்... தைவானை அமெரிக்க பாதுகாக்கும்..!!


America is pissing off China... If China invades Taiwan... America will protect Taiwan..!!

வாஷிங்டன், சீனாவின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்கள் தொடர்நது தைவானுக்கு சுற்று பயணம் செய்து வருகின்றனர்.

எனவே அமெரிக்கா, சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8ஆயிரத்து 688 கோடி) மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க  ஒப்புதல் வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பப்பட்டது. அந்த பேட்டியில் ஜோ பைடன் கூறியதாவது:-

சீனா, தைவான் மீது படையெடுப்பு நடத்தினால், அமெரிக்கப் படைகள் தைவானை பாதுகாக்கும். உக்ரைனில் இருப்பதைப் போல இல்லாமல், தைவான் மீது சீனப் படையெடுப்பு நடத்தினால், அமெரிக்கப் படை வீரர்கள், தைவானை பாதுகாப்பார்கள் என்று உறுதியாக கூறினார்.