அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்.! சோகத்தில் அமெரிக்க தலைவர்கள்.!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்.! சோகத்தில் அமெரிக்க தலைவர்கள்.!



america former vp Walter Mondale passed away

அமெரிக்காவின் 42-வது துணை அதிபராக செயல்பட்டவர் வால்டர் மண்டிலி. இவர் பில் கிளிங்டன் அதிபராக இருந்த போது 1993 முதல் 1996 வரை வால்டர் மண்டிலி ஜப்பானுக்கான அமெரிக்க தூதராகவும் செயல்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக அவர் அரசியலை விட்டு விலகியிருந்தார்.

இந்நிலையில், 93 வயதான வால்டர் மண்டிலி இன்று உயிரிழந்தார். வால்டர் மண்டிலி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். முன்னாள் துணை அதிபர் வால்டர் மண்டிலி மறைவிற்கு அவருடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், வால்டர் மணிடில் மறைவுக்கு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

அதிபர் பாரக் ஒபாமா அவரது ட்விட்டர் பக்கத்தில், வால்டர் மண்டிலி முற்போக்கான காரணங்களை வென்றார் மற்றும் துணைத் தலைவரின் பாத்திரத்தை மாற்றினார். எனவே அவரை தலைவர்கள் விரும்புகிறார்கள். மைக்கேலும் நானும் அவருடைய குடும்பத்தினருக்காக வேண்டி கொள்கிறோம். என தெரிவித்துள்ளார்.