கொரோனாவால் உலக நாடுகளே அச்சத்தில் இருக்கும் நேரத்தில், சீனாவின் ஆயுத சோதனை! கடுப்பான அமெரிக்கா!

கொரோனாவால் உலக நாடுகளே அச்சத்தில் இருக்கும் நேரத்தில், சீனாவின் ஆயுத சோதனை! கடுப்பான அமெரிக்கா!


America angry on china

சீனா ரகசியமாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவது அமெரிக்காவின் ஆயுதக்கட்டுப்பாட்டு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக போராடி வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் மற்றொரு நடவடிக்கையால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அணு ஆயுதங்களை உருவாக்கி அதன் மூலம் போட்டி ஏற்படாமல் இருக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் 1996-ம் ஆண்டு அணு ஆயுத சோதனைக்கான தடை ஒப்பந்தத்தில் இணைந்தன. 

china

ஆனால் ஜின்ஜியாங் மாகாணத்தில் அணு ஆயுத சோதனை தளமாக உள்ள லோப் நூர் பகுதியில்  சீன அரசு கடந்த சில வருடங்களாக ரகசிய அணு ஆயுத சோதனையில் ஈடுப்பட்டு வந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

ஆனால் சீனா மீதான அமெரிக்க விமர்சனம் முற்றிலும் ஆதாரமற்றது அடிப்படையற்றது என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.