ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முட்டுக்கட்டைபோடும் அமெரிக்கா - சூசக எச்சரிக்கை.!

ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முட்டுக்கட்டைபோடும் அமெரிக்கா - சூசக எச்சரிக்கை.!



America Against Indian Govt Decision to Get Russian Crude Oil

உலக நாடுகளின் பொருளாதார தடையால் கச்சா எண்ணெயை சலுகை விலைக்கு ரஷியா விற்பனை செய்ய முன்வந்துள்ள நிலையில், இந்தியா அதனை வாங்க முயற்சித்து வருகிறது. இதற்கு சூசக வகையில் பதில் சொல்லி அமெரிக்கா இந்தியாவை எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து சென்றுள்ளதால், மேற்கு உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடுகள் ரஷியாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. உக்ரைனை ரஷியா சரணடையச்சொல்லி போரிட்டு சென்றுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக ஏகாதிபத்திய மேற்கு நாடுகள் செயல்பட்டு வருகிறது. 

பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த ஒரு நாடும் பிற நாடுகளின் பதில்களை ஏற்றுக்கொள்ளாது என்ற நிலையில், ரஷியாவின் நடவடிக்கைக்கு மேற்கு நாடுகள் பனிப்போரை வைத்து பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா தடை விதித்த நிலையில், ரஷியா சலுகை விலையில் எண்ணெய் கொடுக்க முன்வந்ததால் இந்தியா அதனை வாங்க முயற்சித்து வருகிறது.

America

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளர் ஜென் பாஸ்கி செய்தியாளர்களை சந்திக்கையில், அவரிடம் ரஷியாவின் சலுகை விலைகொண்ட கச்சா எண்ணெயை இந்தியா வாங்க முயற்சிக்கும் தகவல் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இதுபோன்ற தருணங்களில் வரலாற்று புத்தகங்கள் எழுதப்படும் நேரத்தில், நீங்கள் எந்த இடத்தில் நிற்க விரும்புகிறீர்கள் என்பதை சிந்திக்க வேண்டும். 

ரஷிய தலைமையிலான ஆதரவு பேரழிவு கொண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் படையெடுப்புக்கு ஆதரவான நடவடிக்கையாகும்" என்று தெரிவித்தார். இதன் வாயிலாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால், இந்தியா மீதும் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சுட்டி காண்பிப்பது போல பேசி இருக்கிறார். மேலும், இந்தியா ரஷியாவின் உக்ரைன் படையெடுப்பை அது ஆதரவளிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆசிய நாடுகள் மேற்கு ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக ஓரணியில் திரளவேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை என்பதனையே அமெரிக்காவின் கூற்று உறுதி செய்கிறது.