குடியுரிமை தாங்க.. 14 ஆப்கானிய அகதிகள் தற்கொலை.. 10 வருட சோகத்திற்கு முடிவு கேட்டு போராட்டம்.!

குடியுரிமை தாங்க.. 14 ஆப்கானிய அகதிகள் தற்கொலை.. 10 வருட சோகத்திற்கு முடிவு கேட்டு போராட்டம்.!


Afghanistan Refugees Protest at Indonesia

இந்தோனேஷியாவில் வசித்து வரும் அகதிகளில் பெரும்பாலானோர், ஆப்கானிஸ்தானில் உள்ள ஹசாரா சிறுபான்மை குழுவை சார்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களின் ஆப்கானிய குடியேற்றத்திற்கு 10 வருடமாக காத்திருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் கூட இந்தோனேஷியாவில் தங்கியிருக்கும் ஆப்கானிய அகதி தற்கொலை செய்துகொண்டார். 

இந்த துயரத்தை அடுத்து, 22 வயது இளைஞர் கடந்த சில வாரமாக இந்தோனேஷியா முழுவதும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பொருட்டு நூதன போராட்டத்தில் களமிறங்கி போராட்டத்தை நடத்தி வருகிறார். UNHCR என்று அழைக்கப்படும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தில் அகதிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் விரைவில் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறுகின்றனர். 

EndTo10YearsInLimbo

ஐ.நா அகதிகள் இடம்பெயர்வு முகாம்களின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஆப்கானியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 22 வயது ஆப்கானிய இளைஞர் முகாமுக்கு முன்புறம் வைத்து தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள பெகாம்பாரு அகதிகள் முகாமில், குடிஉரிமைக்காக அகதிகள் சிலர் தங்களின் உதடுகளை தைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இவர்கள் கடந்த 10 வருடமாக நாங்கள் குடிஉரிமைக்காக போராடி வருகிறோம். எங்களுக்கென அங்கீகாரம் ஏதேனும் கொடுத்தால், எங்களின் பிழைப்பை பார்ப்போம். எங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உள்ளது. பல துயரங்களுக்கு பின்னர் பிற நாடுகளுக்கு நாங்கள் வந்துள்ளோம். இங்கு 10 வருடமாக குடியுரிமை கொடுக்காமல் வைத்துள்ளது எப்படிப்பட்டது? என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

EndTo10YearsInLimbo

ஹசாரா இனத்தை சார்ந்த சிறுபான்மையினர் பல வருடமாக தலிபான் அமைப்பினரால் துன்புறுத்தப்பட்டு கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தோனேஷியாவில் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களில் மட்டும் குடியுரிமை கேட்டும், அது கிடைக்காது என்ற விரக்தியில் மொத்தமாக 14 ஆப்கானிய அகதிகள் இந்தோனேஷியாவில் தற்கொலை செய்துள்ளனர். 6 பேர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளனர்.

ஆப்கானில் இருந்து இந்தோனேஷியா வரை சென்று, அங்கிருந்து ஆஸ்திரேலியா சென்றுவிடலாம் என பலரும் நினைத்து அங்கு சென்றுவிட, கடந்த 2013 ஆம் வருடத்திற்கு பின்னர் சூழ்நிலை மாறியதால் அவர்கள் ஆஸ்திரேலியா செல்ல இயலவில்லை. ஐ.நா அகதிகள் மாநாட்டிலும் இந்தோனேஷியா கையெழுத்திடவில்லை என்பதால், அகதிகளின் நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது. பள்ளிகள், அரசு மருத்துவமனைகளுக்கும் செல்ல வழியில்லாமல் இருக்கும் அகதிகள், குடியேற்ற தடுப்பு மையம், முகாம் என தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஐ.நாவின் சர்வதேச குடியேற்ற அமைப்பு மூலமாக வீடு பெற்று, தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு, உலகளவில் அதற்கான கவனத்தை ஏற்படுத்த ட்விட்டரில் #EndTo10YearsInLimbo என்ற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.