அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் நேர்ந்து விமான விபத்து... பீதியில் உறைந்த மக்கள்..!

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் நேர்ந்து விமான விபத்து... பீதியில் உறைந்த மக்கள்..!


a-plane-crash-happened-in-a-residential-area-in-the-uni

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொலம்பியாவில் மெடலின் பகுதியிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் விமானியுடன் சேர்த்து எட்டு பேர் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் நடுவானில் இந்த சிறிய ரக விமானம் பறந்து கொண்டிருந்தபோது இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து பெலன் ரோசல்ஸ் செக்டாரில் உள்ள வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

Plane crashed

இந்தக் கோர விபத்தால் விமானம் விழுந்து நொறுங்கிய குடியிருப்பு பகுதிகளில் மளமளவென தீப்பற்றி சுற்றி இருந்த 7 வீடுகள் முற்றிலும் சேதுமடைந்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு படையினர் விபத்தில் உயிர் இழந்தவர்களை மீட்டும், படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தும் உள்ளனர். இந்த கோரவிபத்தில் 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.