3 வயது மகனை கவ்விய முதலை.! முதலையின் மூக்கை பிடித்து மூச்சை நிறுத்தி குழந்தையை மீட்ட தாய்..!
A mother in Zimbabwe rescued her toddler from a killer cocktail

கொடூர முதலை ஒன்றிடம் சிக்கிக்கொண்ட தனது 3 வயது குழந்தையை தாய் ஒருவர் போராடி மீட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த மவுரினா என்ற 30 வயது பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் ரூண்டே (Runde) என்ற ஆற்றுக்கு அருகில் வசித்துவருகிறார். இந்த ஆற்றில் 9 முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது குழந்தைகளை வெளியே விட்டுவிட்டு மவுரினா வீட்டு வேலைகளை கவனித்துள்ளார்.
இதனிடையே மவுரினாவின் மூன்று வயது மகன் கிடியான் முதலைகள் உலாவும் ஆற்றுப்பகுதிக்குள் சென்றுள்ளான். குழந்தையை பார்த்த முதலை ஓன்று அந்த 3 வயது குழந்தையை கவ்வியுள்ளது. முதலை கவ்வியதும் குழந்தை அலறித்துடித்துள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மவுரினா தனது குழந்தை முதலையின் வாயில் இருப்பதை பார்த்து கதறியுள்ளார்.
உடனே சற்றும் யோசிக்காத மவுரினா சட்டென முதலையின் தலை மீது குதித்து தனது குழந்தையை முதலையிடம் இருந்து காப்பாறியுள்ளார். இந்த போராட்டத்தில் முதலை மவுரினாவின் கையை கடித்துவிட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மவுரினா, முதலையின் மூக்கை பிடித்து இழுப்பதன் மூலம் முதலையின் சுவாசம் நிலைகுலையும், அந்த நேரத்தில் முதலை தனது பலத்தை இழக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். இதனை அடிப்படையாக கொண்டு சற்றும் யோசிக்காமல் எனது குழந்தையை காப்பாற்றினேன்.
முதலையிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்றியது தற்போதுவரை தன்னால் நம்பமுடியவில்லை என மவுரினா கூறியுள்ளார்.