இரண்டு முறை திருமணம்...ஐந்து குழந்தைகள்.! 66 வயதில் வரன் தேடும் முதியவர்...வைரலாகும் விளம்பர பலகை.!

இரண்டு முறை திருமணம்...ஐந்து குழந்தைகள்.! 66 வயதில் வரன் தேடும் முதியவர்...வைரலாகும் விளம்பர பலகை.!


66 years old man wanted a good woman

அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வருபவர் ஜிம்(66). இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மீண்டும் நல்ல பெண் தேவை என சாலையில் விளம்பர பலகை வைத்துள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள சாலையில் பிரமாண்ட விளம்பர பலகையை வைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஜிம். அந்த விளம்பர பலகையில் ”WANTED A GOOD WOMAN" என எழுதி அதனுடன் நம்பரையும்  கொடுத்துள்ளார்.

66 years old man

அந்த விளம்பரத்தை பார்த்து இதுவரை நான்கு நான்கு பேர் தொடர்பு கொண்டாலும், யாருடனும் ஒத்துப்போகவில்லை என சோகத்துடன் தெரிவிக்கிறார். ஜிம்மின் விளம்பர பலகை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.