கணவரை கவனித்துக் கொள்ள, சந்தோஷப்படுத்த 3 இளம்பெண்கள் தேவை: நடுத்தர வயது பெண் நூதன விளம்பரம்..!

கணவரை கவனித்துக் கொள்ள, சந்தோஷப்படுத்த 3 இளம்பெண்கள் தேவை: நடுத்தர வயது பெண் நூதன விளம்பரம்..!


3 young women are needed to take care of the husband and make him happy

தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் பதீமா சாம்னன் ( 44). இவர் சமூக வலைதளத்தில் ஒரு வித்தியாசமான விளம்பரம் செய்துள்ளார். நேரடியாக பேசி வீடியோ வெளிட்டுள்ள அவர் தனது கணவரை கவனித்து கொள்ளவும், அவரை திருப்திபடுத்தவும், திருமணமாகாத 3 இளம் பெண்கள் தேவை என்று அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார்.

மேலும், இந்த வேலையில் நியமிக்கப்படுவோருக்கு சம்பளமாக ரூ. 33,800 கொடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு கிடைக்கும். உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு தகுதியையும் அவர் நிர்ணயித்துள்ளார். அதாவது வேலைக்கு சேரும் பெண்கள் இளமையாகவும், படித்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களில் இருவர் தனது கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதமுள்ள ஒருவர் தனது வீட்டை கவனிப்பதோடு, கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

அவருடைய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்க கூடாது, அது ஒரு தடையாக அமையும். மிகவும் கடுமையாக உழைக்கும் தனது கணவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்வதாகவும்  அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்து கொள்ள எனக்கு ஆட்கள் தேவை என்றும் கூறியுள்ளார்.