உலகம் லைப் ஸ்டைல்

10 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது இளைஞர்! வைரலாகும் சர்ச்சை வீடியோ!

Summary:

22 years old man married 10 years old girl in iran video goes viral

ஈரான் நாட்டில் 22 வயது இளைஞர் ஒருவர் 10 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது. நமது நாட்டை பொறுத்தவரை 18 வயதுக்கு உட்பட பெண்களுக்கு திருமணம் செய்வது தவறாது. ஆனால், ஈரான் நாட்டை பொறுத்தவரை 13 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளலாம்.

ஒருவேளை 13 வயதுக்கு குறைவான சிறுமி ஒருவரை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் நீதிபதியின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ளலாம். இந்நிலையில் குறிப்பிட்ட வீடியோவில் இருக்கும் அந்த பெண்ணிற்கு 9 முதல் 11 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், அந்த பெண்ணிடம் குறிப்பிட்ட நபரை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என மதகுரு கேட்க என் பெற்றோரின் சம்மதத்துடன் அந்த பெண்ணும் ஆம் என்கிறார். பின்னர் அவர்கள் திருமணம் நடைபெற அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். குறிப்பிட்ட இந்த வீடியோ வைரலானதை அடுத்து குறிப்பிட்ட திருமணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணம் ஈரான் குடும்பச் சட்டத்தின் 50 வது பிரிவை மீறியது என்றும், இது சட்டபூர்வமான வயதை எட்டாத ஒரு பெண்ணை மணக்கும் மனிதனுக்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறுகிறது. மேலும், மணமகன் மற்றும் மதகுரு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


Advertisement