சும்மா வழக்கமான மெடிக்கல் செக்கப்க்கு போன நபர்... சோதனையின்போது அதிர்ந்து போன மருத்துவர்! வலியே இல்லாம இருந்துருக்கு...

சும்மா வழக்கமான மெடிக்கல் செக்கப்க்கு போன நபர்... சோதனையின்போது அதிர்ந்து போன மருத்துவர்! வலியே இல்லாம இருந்துருக்கு...



1kg tumour removed from patients kidney in Dubai

வழக்கமான உடற்பரிசோதனைக்கு சென்ற நபருக்கு சோதனையின்போது பெரும் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் துபாயில் நடந்துள்ளது.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு வழக்கமான உடல் பரிசோதனை அவ்வப்போது மேற்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கமான ஒன்று. அதற்கு காரணம் சில வியாதிகள் அறிகுறியே இல்லாமல் நமது உடலில் தோன்றி பின் உயிரையே பறிக்கும் அளவிற்கு மோசமானதாக மாறிவிடலாம் என்பதால்தான்.

அதுபோன்ற சம்பவங்களில் ஒன்றுதான் இது. துபாயில் வசித்து வருபவர் மனோஜ். அதிகமான புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவர் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் மனோஜை சோதனை செய்தபோதுதான் தெரிந்தது, மனோஜின் சிறுநீரகத்தில் கட்டி இருப்பது. இதனை பார்த்து மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து மனோஜிடம் கேட்டபோது அவரும் அதிர்ச்சி அடைந்தநிலையில் இந்த கட்டி சம்மந்தமாக இதுவரை தான் எந்த ஒரு வலியையும் உணரவில்லை என அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த கட்டியை அப்படியே விட்டால் மனோஜின் உயிருக்கு ஆபத்து வரும் என கூறிய மருத்துவர்கள் உடனே அந்த கட்டியை அகற்ற முடிவு செய்தனர். அதேநேரம் அது சாதாரண கட்டியா அல்லது புற்று நோய் கட்டியா என்பதும் தெரியவில்லை. வயிற்றை கிழித்து அறுவை சிகிச்சை செய்தால் அது மனோஜின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என உணர்ந்த மருத்துவர்கள் தீவிர ஆலோசனைக்கு பிறகு  Laparoscopy மூலம் மூன்று மணி  நேரச் சிகிச்சைக்குப் பின்னர் மனோஜின் வயிற்றில் இருந்து 1 கிலோ அளவிலான கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

இதனை அடுத்து மனோஜ் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம் போன்றவற்றால் கண்ணனுக்கு தெரியாமல் இதுபோன்று ஏராளமான வியாதிகள் வருவதால் ஆரோக்கியமான உணவு, அவசியமான உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் உடலை பாதுகாக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.