விபரீதத்தில் முடிந்த திருடன் போலீஸ் விளையாட்டு! கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன்! பகீர் சம்பவம்!

விபரீதத்தில் முடிந்த திருடன் போலீஸ் விளையாட்டு! கைது செய்யப்பட்ட 13 வயது சிறுவன்! பகீர் சம்பவம்!


13 year boy shoot and killed her younger brother

அமெரிக்கா பென்சில்வேனியா பகுதியில் வசித்து வந்தவர் பிரேய்டென் லெரோய் வ்ரைட்.13 வயது நிறைந்த அவன் தனது 9 வயது தம்பியுடன் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே  பிரேய்டெனின் பேச்சைக் கேட்காமல் அவனது தம்பி யூடியூப் வீடியோ பார்ப்பதற்கு சென்றுள்ளார். மேலும் பிரேய்டெனினுடன் விளையாடவில்லை.

இந்நிலையில் கோபமடைந்த அவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து அவனது தம்பியின் பின்தலையில் சுட்டுள்ளான். இந்நிலையில் குண்டு தலையில் பாய்ந்ததில் சிறுவன் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார்கள் அவசர உதவி எண்ணை  தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர்.

gunshoot

இந்த நிலையில் அங்கு விரைந்த மருத்துவக்குழு உதவினர் பரிசோதனை மேற்கொண்டபோது சிறுவன் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார்கள் ப்ரேய்டெனை கைது செய்து அவரிடம் இதுகுறித்து  விசாரித்துள்ளனர்.

அப்பொழுது அவர் அந்தத் துப்பாக்கி தனது தந்தையின் நிஜதுப்பாக்கி என்பது எனக்கு நன்கு தெரியும். மேலும் அதில் குண்டு இருந்ததும் எனக்கு தெரியும் வேண்டுமென்றே செய்ததாக  கூறியுள்ளார். இந்தநிலையில் அவரது பெற்றோர்கள் தங்களது  இரண்டு பிள்ளைகளின் நிலை குறித்தும் எண்ணி மிகுந்த சோகத்தில் உள்ளனர்.