உலகம் லைப் ஸ்டைல்

மண்ணை தோண்ட தோண்ட இளைஞர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! 1100 வருசத்துக்கு முந்தைய மண்பானை.! அம்புட்டும் தங்கம்.!

Summary:

1000 years old gold coins stashed away in clay vessel unearthed in Israel

மண் பானையில் வைத்து பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்த 1100 ஆண்டுகளுக்குமுந்தைய தங்க நாணயங்களை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி மத்திய இஸ்ரேலில் ஒரு அகழ்வாராய்ச்சியில் இளைஞர்கள் சிலர் முன்வந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த புதையல் குறித்த பல்வேறு சுவாரசியமான தகவல்களையும் இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

அதவாது பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதையல் யார் கைகளுக்காவதுகிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் இந்த மண் பானையை புதைத்துவைத்தவர்கள் அந்த பானை அந்த இடத்தில் இருந்து நகராமல் இருக்க ஆணி போன்ற இரும்பு கம்பிகளால் அடித்து அந்த பானையை பத்திரப்படுத்திவைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதையலுக்கு சொந்தக்காரர் யார்? அல்லது புதையலை அங்கு மறைத்து வைத்தது யார்? என்ற எந்த விவரமும் அங்கு இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புதையலை பார்த்த இளைஞர்களில் ஒருவர் கூறும் போது, முதலில் மிக மெல்லிய இலைகள் போன்று தென்பட்டதாகவும், பின்னர் தோண்டி பார்த்தபோது அனைத்தும் தங்க காசுகளாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பானைக்குள் இருந்த தங்க நாணயங்கள் அனைத்தும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அப்பாஸித் கலிபாட் காலத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த 24 காரட் தூய தங்க நாணயங்கள் என தெரியவந்துள்ளது. அந்த பானையில் மொத்தம் 425 பொற்காசுகள் இருந்துள்ளன.

இந்த நாணயத்தின் அன்றைய தொகையை மதிப்பிட்டால், இந்த தங்க நாணயங்களை இங்கு பதுக்கி வைத்தவர் அந்த காலத்தில் எகிப்தின் செல்வந்த தலைநகர் ஃபுஸ்டாட்டில் ஒரு ஆரடம்பர வீட்டை வாங்கியிருக்க முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement