தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
வேலைவாய்ப்பில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போருக்கு மாதாமாதம் அரசு சார்பில் உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போருக்கு அடுத்த மூன்றாண்டுகள் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 300, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, கல்லூரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 600 வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பிற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் மொத்தமாக 67 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.