உங்களிடம் இன்னும் அதே போன் தான் உள்ளதா! வாட்ஸ்-ஆப் பயன்படுத்துவதில் புதிய சிக்கல்

உங்களிடம் இன்னும் அதே போன் தான் உள்ளதா! வாட்ஸ்-ஆப் பயன்படுத்துவதில் புதிய சிக்கல்



Whatsapp may not work in windows mobiles

உலகம் முழுவதும் பல்வேறு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது வாட்ஸ்-ஆப் நிறுவனம். மெஸேஜ், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அம்சங்களை வாட்ஸ்-ஆப் செயலி அளிக்கிறது. 

மேலும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை அளிக்கும் வன்னம் வாட்ஸ்-ஆப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது வாட்ஸ்-ஆப் நிறுவனம். 

Whatsapp

தற்பொழுது இந்த வாட்ஸ்-ஆப் நிறுவனம் விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என அனைத்து விதமான மொபைல் தளங்களிலும் வேலை செய்து வருகிறது. ஆனால் வரும் 2019, டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் மொபைல்களில் வாட்ஸ்-ஆப் இயங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நோக்கியா நிறுவனம் முதலில் தன்னுடைய ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் ஓயெஸை கொண்டு தான் தயாரித்தது. பின்னர் ஆண்ட்ராய்டு போன்கள் பயனாளர்களை கவர்ந்து இழுக்கவே விண்டோஸ் போன்களின் விற்பனை சரிந்தது. 

Whatsapp

அதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன்களின் தயாரிப்பினை நிறுத்திய நோக்கியா நிறுவனம் தற்பொழுது ஆண்ட்ராய்டினை கொண்டே மொபைல் போன்களை தயாரிக்கிறது. இதனால் பழைய விண்டோஸ் போன்களில் எந்தவித அப்டேட்டுகளும் வருவதில்லை. 

இதன் காரணமாகவே வாட்ஸ்-ஆப்பின் புதிய வெர்சன்களை விண்டோஸ் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாத நிலை உருவாகவுள்ளது.