இந்தியா டெக்னாலஜி

இனி வாட்ஸப்பில் போலி செய்தி அனுப்பினால் நீங்க காலி! மத்திய அரசு புது முடிவு!

Summary:

Whatsapp fake messenger users be aware

தகவல் பரிமாற்றம் என்ற பெயரில் நாளுக்கு நாள் தவறான அல்லது போலியான செய்திகள் அதிகம் பகிரப்படுகிறது. அதுபோன்ற போலியான செய்திகள், தகவல்களால் நாட்டில் ஏகப்பட்ட குழப்பங்கள் வருகிறது. 

இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமுக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் புதிய திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, பொது அமைதி கருதி வதந்திகளைக் கண்காணித்துப் போலி செய்திகள் என்றால் அவற்றை சம்மந்தப்பட்ட நிறுவனம் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.

போலி செய்தியை நீக்கியது மட்டும் இல்லாமல், அந்த செய்தியை யார் உருவாக்கியது அல்லது அனுப்பியது என்ற முழு தகவலையும் சேகரித்து சம்மந்தப்பட்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் 180 நாட்கள் வரை சம்மந்தப்பட்ட நபரின் தகவல்களை சம்மந்தப்பட்ட நிறுவனம் சேமித்து வைக்க வேண்டும். மேலும் அரசு நிறுவனத்துடன், சம்மந்தப்பட்ட நிறுவனம் ஒத்துழைக்க வேண்டும்.

எனவே போலியான செய்திகளை பரப்பும் வாட்சப் பயனாளர்கள், வாட்ஸப்பில் வரும் செய்தி உண்மையா, பொய்யா என தெரியாமல் அதை பார்வேர்ட் செய்பவர்கள் இனி கவனமுடன் செயல்படுங்கள்.


Advertisement